Home » 72 சுகாதாரத்துறை தொழிற்சங்க போராட்டத்தால் நோயாளர் நிர்க்கதி

72 சுகாதாரத்துறை தொழிற்சங்க போராட்டத்தால் நோயாளர் நிர்க்கதி

by mahesh
January 17, 2024 8:20 am 0 comment

சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்த வேலை நிறுத்தத்தால், நாடளாவிய ரீதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், நிதி இராஜாங்க அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன நேற்று முன்தினம் அறிவித்திருந்த நிலையிலும்,72 சுகாதார சேவை தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர்.

சில கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள், நேற்று காலை 6.30 மணி முதல் 24 மணித்தியாலங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தமக்கும் பெற்றுத் தருமாறு கோரியே சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

எனினும், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். எவ்வாறெனினும் நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற விருந்தது. இதற்கான அழைப்பை சுகாதார அமைச்சர் விடுத்திருந்தார்.

அநாவசியமாக சுகாதார தொழிற்சங்கங்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தால், தொடர்ந்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நேருமென, தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT