Home » 2023 ஆம் ஆண்டிலேயே அதிக போதைப்பொருள் கைப்பற்றல்

2023 ஆம் ஆண்டிலேயே அதிக போதைப்பொருள் கைப்பற்றல்

81 சந்தேக நபர்களும் கைது

by mahesh
January 6, 2024 6:00 am 0 comment

கடந்த வருடத்தில் சுமார் இரண்டரை பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை கைப்பற்றியதுடன், 81 சந்தேக நபர்களை கைது செய்ததாக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில வருடங்களில் சுங்கத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றியமையை நோக்கும் போது, கடந்த வருடத்திலேயே அதிக தொகை கொண்ட போதைப்பொருளை கைப்பற்றியதாகவும், அத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

ஹெரோயின், ஹஸிஸ், கொக்கெய்ன் மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றையே கைப்பற்றியதாகவும், அத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து கொழும்பு, நுகேகொடை, அநுராதபுரம், கண்டி, பாணந்துறை ஆகிய இடங்களில் வசிக்கும் நபர்கள் சிலருக்கு இப்போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த முகவரிகளை விசாரித்த போது, அவை போலி முகவரிகளென தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அவை மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாகவும், சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT