Saturday, April 27, 2024
Home » மலையகம் 200 வருடம்: பா.ஜ.க., இ.தொ.கா. ஏற்பாட்டில் டெல்லியில் முத்திரை வெளியீடு!

மலையகம் 200 வருடம்: பா.ஜ.க., இ.தொ.கா. ஏற்பாட்டில் டெல்லியில் முத்திரை வெளியீடு!

- முதல் முத்திரை இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானிடம் கையளிப்பு

by Rizwan Segu Mohideen
December 30, 2023 7:23 pm 0 comment

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவர்களின் “உழைப்பை” அங்கீகரிக்கும் வகையில், நினைவு அஞ்சல் முத்திரை இன்று (30)புதுடில்லியில் வெளியிடப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் வழிகாட்டலில், தமிழ்நாடு பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில், பாரதீய ஜனதாக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இந்த முத்திரையை வெளியிட்டு வைத்தார்.

இம்முத்திரையை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர், வீரகேசரி பத்திரிக்கையின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், GOPIO தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவி அனுசியா சிவராஜா, பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தாவிசாளர் ராஜதுரை, தேசிய அமைப்பாளர் சக்திவேல், சிரேஸ்ட ஆலோசகர் மதியுகராஜா இ.தொ.காவின் உப தலைவர்களான சிவஞானம், பிலிப் குமார், அசோக் குமார், பாஸ்கர், பிரதி பொது செயலாளர் செல்லமுத்து உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.

மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT