Saturday, May 4, 2024
Home » தெலுங்கு Bigg Boss 7: டைட்டில் வின்னரான யூடியூப் பிரபலம்

தெலுங்கு Bigg Boss 7: டைட்டில் வின்னரான யூடியூப் பிரபலம்

- ரூ.35 இலட்சத்தை வென்ற போட்டியாளர்

by Prashahini
December 18, 2023 4:23 pm 0 comment

Bigg Boss 7 போட்டியில் விவசாயி ஒருவர் டைட்டில் வின்னராகி ரூ.35 இலட்சத்தை வென்றுள்ளார்.

தமிழில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சியை போல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிக்பாஸ் சீசன்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்தியில் சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜூனாவும் பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் தமிழ் 7 சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 கமல்ஹாசனுக்கு எதிராக பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதில் தொடங்கி, மாயாவுக்கு ஆதவாக பேசுவது, அரசியலுக்காக பேசுவது, பூர்ணிமாவை சாடுவது என கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழைப் போல் தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் நடந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7ஐ நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார். தமிழ் பிக்பாஸை போல் தெலுங்கு பிக்பாஸில் திரைப்பிரபலங்கள் மட்டுமில்லாமல் யூடியூப் பிரபலங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பங்கேற்ற பல்லவி பிரசாத் என்ற யூடியூப் பிரபலமான ஒருவர், தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றுள்ளார். விவசாயம் தொடர்பான
யூடியூப் சேனலை நடத்தி வரும் பல்லவி பிரசாத், தனக்கான ஃபாலோவர்ஸை அதிகமாகக் கொண்டுள்ளார். தெலங்கானாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பல்லவி பிரசாத், தன்னுடைய யூடியூப் சேனலில் விவசாயம் தொடர்பான வேலைகளைப் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்தார்.

தன்னை ஒரு விவசாயின் குழந்தை என்று கூறிக் கொள்ளும் பல்லவி பிரசாத், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று பிரபலமாகியுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் இருந்து வரவேற்பை பெற்ற இவர், கடைசியாக டைட்டில் வின்னராகி ரூ.35 இலட்சத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரைப் பிரபலம் இல்லாத ஒருவர், டைட்டில் வின்னராகி ரூ.35 இலட்சம் வென்றிருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT