Tuesday, April 30, 2024
Home » கிழக்கு, ஊவா, மாத்தளை, பொலன்னறுவை பகுதிகளில் அவ்வப்போது மழை

கிழக்கு, ஊவா, மாத்தளை, பொலன்னறுவை பகுதிகளில் அவ்வப்போது மழை

- வடக்கு, அநுராதபுதம், அம்பாந்தோட்டையில் பல முறை மழை

by Rizwan Segu Mohideen
December 13, 2023 7:10 am 0 comment

– சில இடங்களில் பிற்பகலில் 75 மி.மீ. அளவான பலத்த மழை

இன்றையதினம் (10) நாட்டின் வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1 .00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT