Saturday, April 27, 2024
Home » விவாகரத்தை இலகுவாக்கும் 3 சட்டமூலங்கள் விரைவில்

விவாகரத்தை இலகுவாக்கும் 3 சட்டமூலங்கள் விரைவில்

வருடக்கணக்கில் வழக்குகள் இழுபறியாவதற்கு முடிவு

by gayan
December 12, 2023 6:30 am 0 comment

விவாகரத்துப் பெறுவதை இலகுவாக்கும் மூன்று புதிய சட்டமூலங்கள் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, திருமணக் காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளும் சட்டமூலங்களே சமர்ப்பிக்கப்படவுள்ளன. விவாகரத்து பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் காலாவதியான சட்டங்கள்

தற்போதுள்ள நடைமுறையில் விவாகரத்து கோரும் நபர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்பு , தீங்கிழைக்கும் விலகல் அல்லது ஆண்மைக் குறைவு ஆகிய மூன்று உண்மைகளில் ஒன்றை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும். இந்த உண்மைகளை நிரூபிக்கும் பொறுப்பு விவாகரத்து கோருபவர் மீது உள்ளது. இதுபோன்ற காரணங்களை நிரூபிப்பது மிகவும் கடினம். இதனால், சில விவாகரத்து வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரை இழுபறியாக உள்ளன. விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதில் இந்த உண்மைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT