Sunday, April 28, 2024
Home » Uber தனது ‘Nawa Gamanak’ மூலம் ஓட்டுநர் நலன் சார்ந்த முயற்சிகளை முன்னெடுக்கிறது

Uber தனது ‘Nawa Gamanak’ மூலம் ஓட்டுநர் நலன் சார்ந்த முயற்சிகளை முன்னெடுக்கிறது

by Rizwan Segu Mohideen
December 8, 2023 11:27 am 0 comment

தனது தளத்திலுள்ள நான்கு சக்கர மோட்டார் வாகன ஓட்டுநர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியில், ‘Nawa Gamanak’ என்ற புதிய முயற்சியை Uber அறிமுகப்படுத்தியுள்ளது. செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் ஓட்டுனர் நம்பிக்கை அங்கத்துவத் திட்டத்தை இதன் மூலமாக அறிமுகப்படுத்துகிறது. புதிய அம்சங்கள் ஓட்டுநர்களுக்கான வருமான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு, ஒவ்வொரு முறையும் Uber இல் வாகனம் ஓட்டும்போது அவர்களுக்கு கூடுதல் தெரிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை வழங்கும். அதிக தேவை உள்ள காலங்களில் ஒரே நேரத்தில் பல கோரிக்கைகளுக்கான அணுகலைப் பெறுவதோடு, பயணக் கோரிக்கையைப் பெறும்போது, ஓட்டுநர்கள் தாம் எதிர்பார்க்கும் வருவாயை இப்போது அறிந்து கொள்ள முடியும்.

Nawa Gamanak இன் கீழ், நிறுவனம் ஓட்டுநர்களுக்கான விசேட நம்பிக்கை அங்கத்துவத் திட்டத்தையும் இது அறிமுகப்படுத்தியுள்ளது. Uber Pro என்ற பெயரில் நிறுவனம் அதிகளவில் நிறைவு செய்யப்பட்ட பயணங்களுடன் சிறந்த தரமதிப்பீடு பெற்ற தனது ஓட்டுநர்களுக்கு வெகுமதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறப்பான வாடிக்கையாளர் மதிப்பீடுகள் (4.8 க்கு மேல்) மற்றும் அதிக பயண நிறைவு வீதம் கொண்ட ஓட்டுநர்கள் விசேட பண வெகுமதிகளையும் பிரத்தியேக சலுகைகளையும் பெறுவார்கள். மேம்படுத்தப்பட்ட ஆதரவு மற்றும் வாகன பராமரிப்பு மற்றும் காப்புறுதி மீதான தள்ளுபடிகள் தவிர, தெரிவு செய்வதற்கான கூடுதல் விருப்பங்களைப் பெறுவதன் மூலம், வீதியிலும் வெளியேயும் ஓட்டுநர்கள் தங்கள் இலக்குகளை அடைய உதவும் வகையில் Nawa Gamanak வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் Nawa Gamanak அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த Uber Sri Lanka இன் உள்நாட்டு முகாமையாளர் கௌஷல்யா குணரத்ன, Uber இல் எமது செயல்பாடுகள் அனைத்திலும் ஓட்டுநர்களே மையப்புள்ளியாக உள்ளனர். மேம்படுத்தப்பட்ட தெரிவு மற்றும் ஓட்டுநர்களுக்கான நெகிழ்வுத்தன்மை ஆகியன அவர்களின் விருப்பத்திற்குரிய தளமாகத் தொடர்ந்து திகழ Uber க்கு இடமளிக்கும். Uber Pro ஆனது அதிக செயலி மதிப்பீடு மற்றும் பயண நிறைவு வீதத்தை பேணுவதன் மூலம் சவாரி செய்கின்றவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் ஓட்டுநர்களுக்கு வெகுமதி அளிக்கும். இந்த மாற்றங்கள் சிறந்த தரம் பெற்ற ஓட்டுனர்களால் Uber இயங்குதளம் ஏற்றுக்கொள்ளப்படுவதையும், தொடர்ந்து பயன்படுத்துவதையும் ஊக்குவிப்பதற்கும் Uber செயலியில் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் நீண்ட பலளனிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

Uber Pro இன் கீழ் கிடைக்கின்ற வெகுமதிகள்

Uber Pro நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது: Blue, Gold, Platinum மற்றும் Diamond என அமைந்துள்ளதுடன், அவற்றுள் Diamond மிக உயர்ந்த அடுக்காக உள்ளது. தளத்தில் புதிதாக இணையும் ஒரு ஓட்டுநர் Blue அடுக்கு நிலையுடன் தொடங்கி, ஒவ்வொரு நிறைவுப் பயணத்திலும் ‘புள்ளிகளை’ சம்பாதித்து, மற்ற அளவுகோல்களைப் பூர்த்தி செய்வதன் மூலம் மேல்நோக்கி நகர்கிறார். ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் புள்ளிகள் மீட்டமைக்கப்படும், எனவே ஓட்டுநர்களின் அடுக்கு நிலை 3 மாதங்கள் நீடிக்கும் காலத்தில் தீர்மானிக்கப்படுகிறது. ஓட்டுநர்கள் உயர் அடுக்கு நிலையை நோக்கிச் செல்லும்போது, பொது வாகனக் காப்புறுதி மற்றும் சுகாதாரக் காப்புறுதியில் தவணை அடிப்படையிலான கட்டுப்பணம் செலுத்துதல், 50% இழப்பீடு கோரப்பட்டிருக்காமைக்கான போனஸ் (no claim bonus) மற்றும் வாகனத்தின் விரிவான சுத்தமாக்கலுக்கு 55% தள்ளுபடி உட்பட மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் பிரத்தியேக சலுகைகள் மற்றும் அனுபவ வெகுமதிகளுக்கான அணுகலைப் பெறுகிறார்கள். மேலும், ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் வாங்கும் மூக்குக்கண்ணாடிகளுக்கு 20% தள்ளுபடியும் வழங்கப்படும்.

முழு காலாண்டு வரை சிறந்த மதிப்பீடான ‘Diamond’ ஐப் பேண முடிந்த ஓட்டுநர்களுக்கு  ரூபா 25,000/- பணப் பரிசு வழங்கப்படும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை உட்பட பிரத்தியேகமான பிற அனுபவ வெகுமதிகளுக்கான அணுகலை உயர்மட்ட ஓட்டுநர்கள் பெற்றுள்ளனர்.

பிரதேசத்தை தெரிவு செய்வதற்கான முன்னுரிமை: தினசரி இரண்டு மணிநேரங்களுக்கு, Platinum மற்றும் Diamond அடுக்குகளில் இருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு விருப்பமான பிரதேசத்தில் இருந்து பயணங்களைப் பெறுவதை தெரிவு செய்யலாம். இது அவர்களுக்கு விருப்பமான பிரதேசத்தில் வாகனம் ஓட்டுவதற்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும்.

முன்னுரிமை ஆதரவு: Gold, Platinum மற்றும் Diamond அடுக்குகளின் ஓட்டுநர்கள் Uber greenlight மையங்களில் வரிசையைத் தவிர்த்து, முன்னுரிமையின் அடிப்படையில் விசேட ஆதரவைப் பெறலாம். இதேபோல், அவர்கள் தொலைபேசி வழியாக முன்னுரிமை அளிக்கப்பட்ட ஆதரவைப் பெறுகிறார்கள்.

Uber ஐ முன்பதிவு செய்து ஓட்டுநடன் இணைக்கப்பட்ட பிறகு, சவாரி செல்லவுள்ளவர்கள் ஓட்டுநரின் அடுக்கு நிலையைப் பார்க்க முடியும். Uber செயலியில் ஓட்டுநர்களும்; தங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க முடியும். இந்த திட்டம் தற்போது கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவில் நேரடியாக உள்ளது. எதிர்காலத்தில் இதை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.   

பொறுப்புத் துறப்பு: வெகுமதிகள் ஓட்டுநரின் இருப்பிடம் மற்றும் Uber Pro நிலையைப் பொறுத்து மாறுபடும் என்பதுடன், மேலும் அவை மாற்றத்திற்கு உட்பட்டவை. இங்கு விபரிக்கப்பட்டுள்ள வெகுமதிகள் Uber Pro கிடைக்கும் அனைத்து நகரங்களிலும் கிடைக்காமல் போகலாம். கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் விலக்கல்கள் பொருந்தும். முழுமையான விவரங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும்.

Uber தொடர்பான விபரங்கள்
பிரயாணத்தின் மூலம் வாய்ப்பைத் தோற்றுவிப்பதே Uber இன் நோக்கம். ஒரு பொத்தானைத் தொடுவதால் நீங்கள் எவ்வாறு பிரயாணத்தை மேற்கொள்ளலாம்? என்ற கேள்விக்கு ஒரு எளிய தீர்வுடன் 2010 ஆம் ஆண்டில் நாங்கள் செயற்பட ஆரம்பித்தோம். 25 பில்லியனுக்கும் அதிகமான பயணங்களுக்குப் பிறகு, மக்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு இட்டுச்செல்ல தீர்வுத்திட்டங்களைக் கட்டியெழுப்பி வருகிறோம். நகரங்கள் வழியாக மக்கள் செல்வது, உணவு மற்றும் விடயங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை மாற்றுவதன் மூலம், புதிய வாய்ப்புக்களுக்கான உலகிற்கு வழிகோலும் ஒரு தளமே Uber ஆகும். 2015 இல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, Uber Rides இலங்கையில் 40 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைந்துள்ளதுடன் மற்றும் பல தயாரிப்புகளைச் சேர்ப்பதன் மூலம் இயங்குதள அனுபவத்தையும் மேம்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT