Friday, May 10, 2024
Home » ஓடும் கால்வாயினுள் கவிழ்ந்த இ.போ.ச பஸ்

ஓடும் கால்வாயினுள் கவிழ்ந்த இ.போ.ச பஸ்

- மற்றுமொரு பஸ்ஸிற்கு வழிவிட முயன்றதால் விபத்து

by Prashahini
December 8, 2023 12:33 pm 0 comment

கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி லக்ஷபான வீதியில் சென்று கொண்டிருந்த ஹட்டன் இ.போ.ச பஸ்ஸொன்று இன்று (08) வீதியின் குறுக்கே ஓடும் கால்வாயில் வீழ்ந்ததால் அந்த வீதியின் போக்குவரத்து அதிகாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை முற்றாக தடைப்பட்டது.

குறித்த பஸ்ஸானது எதிர்திசையில் வந்த மற்றுமொரு பஸ்ஸிற்கு வழிவிடச் சென்றபோது பிரதான வீதியை ஒட்டியிருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனினும், விபத்தினால் அவ்வீதியில் பயணித்த ஏனைய வாகனங்களின் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT