324
2022 (2023) A/L பரீட்சையின் மீளாய்வு செய்யப்பட்ட பரீட்சை பெறுபேறு இன்று (24) வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மறுபரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான websites: www.doenets.lk / www.results.exams.gov.lk ஊடாக பார்வையிட முடியும் என தெரிவித்தார்.
ஆணையாளர் நாயகம் கூற்றுப்படி, A/L பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு மொத்தம் 60,336 விண்ணப்பங்கள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.