Monday, May 6, 2024
Home » சீரற்ற வானிலையால் மலையக ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

சீரற்ற வானிலையால் மலையக ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

- பதுளை வரையான அனைத்து ரயில்களும் நானுஓயா வரை மட்டுப்பாடு

by Prashahini
November 23, 2023 11:52 am 0 comment

மலையகத்துக்கான ரயில் பாதையில் ஹாலிஎல – உடுவர பிரதேசத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்று (23) மலையக மார்க்கத்தினூடாக பதுளை வரை போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து ரயில் சேவைகளையும் நானுஓயா வரை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் N.J.இதிபொல தெரிவித்துள்ளார்.

மலையக ரயில் மார்க்கத்தின் பல பகுதிகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதி பலாங்கொடை சமனலவெவ ஹல்பே பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் மண்சரிவு காரணமாக கொழும்பு பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை, இம்புல்பே, சீலகம ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT