Home » சிறுவர்களின் மயானமாக மாறிவரும் காசா நகரம்

சிறுவர்களின் மயானமாக மாறிவரும் காசா நகரம்

ஐ.நா. செயலாளர் எச்சரிக்கையுடன் கவலை

by mahesh
November 8, 2023 1:25 pm 0 comment

சிறுவர்களின் மயானமாக காசா நகர் மாறிவருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரஸ் மிகக் கவலையுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது, மனிதாபிமான நெருக்கடியைவிடவும் மனித குலத்தின் நெருக்கடியாகுமென அவர் தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் கொல்லப்படுகின்றனர். உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணங்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார். காசா போர் ஆரம்பித்து ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலில் இதுவரையில், 10 ஆயிரத்து 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 04 ஆயிரத்து 104 சிறுவர்களும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT