Friday, May 17, 2024
Home » தீபாவளிக்கு தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

தீபாவளிக்கு தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

- அன்றைய தினத்திற்கு பதிலாக நவம்பர் 18 இல் பாடசாலை

by Prashahini
November 8, 2023 12:29 pm 0 comment

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும், அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமது கோரிக்கையை ஏற்று, தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளிக்கு விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்த ஆளுநருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் சுழற்சி நிருபர்

எம். செல்வராஜா   – பதுளை தினகரன் விசேட நிருபர்   

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT