நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான நான்கு களஞ்சியசாலைகளில் கையிருப்பிலிருந்த நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஐந்து உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொல்கஹவெல, ஆனமடுவ, நிகவெரட்டிய மற்றும் மஹவ ஆகிய நான்கு நெற் களஞ்சியசாலைகளில் 9,07,550 கிலோ நெல் காணாமற் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவங்கள் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளன. சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொடவிடம் இது குறித்த விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பணிப்புரை விடுத்திருந்தார்.
விசாரணை அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (07) விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.இதன் பிரகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நால்வர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.