Home » QR குறியீட்டுடன் புதிய சாரதி அனுமதிப்பத்திரம்

QR குறியீட்டுடன் புதிய சாரதி அனுமதிப்பத்திரம்

-புள்ளிகளை குறைக்கவும் நடவடிக்கை

by sachintha
November 3, 2023 7:53 am 0 comment

தற்போதுள்ள குறைக் கடத்திக்கு (semiconductor) பதிலாக (QR) “விரைவு-பதிலளிப்பு குறியீடுகளுடன் சாரதி அனுமதி அட்டையை வழங்கும் திட்டத்தை, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

அமைச்சரவை அனுமதி கிடைத்ததால், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளார். சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடுதல் மற்றும் வழங்கும் நடவடிக்கையை கடந்த ஒக்டோபர் 16இல்,இராணுவம்

மீண்டும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

“விரைவு-பதிலளிப்பு (QR) குறியீடுகளுக்கான தனி செயலி, மோட்டார் மற்றும் பொலிஸ் திணைக்களங்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளார். மேலும் போக்குவரத்து சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கான டிமெரிட் புள்ளிகள் முறையும் ஸ்மார்ட் சாரதி அனுமதி அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT