Home » பாலமுனை ரைஸ்டார் சம்பியன்

பாலமுனை ரைஸ்டார் சம்பியன்

by damith
October 2, 2023 4:17 pm 0 comment

களுவாஞ்சிக்குடி உதயதாரகை விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர் தங்கராசா பூமணி வெற்றிக்கிண்ணத்தை பாலமுனை ரைஸ்டார் விளையாட்டு கழகம் தனதாக்கிக் கொண்டது.

சுமார் 64 கழகங்கள் கலந்து கொண்ட இப்போட்டி போரைதீவு உதயதாரகை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (30) நடைபெற்றது.

இறுதி போட்டியில் ரைஸ்டார் அணி 93 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு அக்கினி விளையாட்டு கழக அணியினர் 75 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் தோல்வி அடைந்தனர்.

இச் சுற்றுப் போட்டியில் பாலமுனை ரைஸ்டார் அணியின் போட்டி நாயகன், சிறந்த பந்து வீச்சாளர், இமேஜிங் வீரர் என மூன்று விருதினை எஸ்.எல். ஹாசிக் பெற்றுக் கொண்டதோடு, அணி தலைவர் பைஸ் சிறப்பு பந்து வீச்சாளர் விருதினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாலமுனை விசேட, ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT