Sunday, April 28, 2024
Home » ஹரக் கட்டாவிற்கு உதவி; தப்பிச் சென்ற கான்ஸ்டபிளை தேடும் பொலிஸார்

ஹரக் கட்டாவிற்கு உதவி; தப்பிச் சென்ற கான்ஸ்டபிளை தேடும் பொலிஸார்

- கைவிலங்கை அவிழ்த்து விடுவித்ததாக சந்தேகம்

by Rizwan Segu Mohideen
September 12, 2023 10:17 am 0 comment

– STF அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்த ஹரக் கட்டா

‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனும் திட்டமிட்ட குற்றச் செயல்களை புரியும் சந்தேகநபருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹரக் கட்டா

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ நேற்று முன்தினம் (10) விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவரை மலசல கூடத்திற்கு அழைத்துச் செல்ல உதவிய குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் காணாமல் போயுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுடன் மலசல கூடத்திற்குச் சென்று திரும்பிய ‘ஹரக் கட்டா’ தனது கைகளுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது போன்று நடித்தவாறு வௌியே வந்துள்ளதோடு, அங்கு அவரது பாதுகாப்பிற்காக இருந்த STF உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கியை திடீரென பறிக்க முயன்றுள்ளார்.

பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் போது, ​​’ஹரக் கட்டா’ தனது கைவிலங்குகளை STF அதிகாரிக்கு போட முயன்றுள்ளார்.

சம்பவத்தின்போது, ​​குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவ்விடத்திலிருந்து ஓடி, 4ஆவது மாடிக்குச் சென்று, ​​தனது கைத்தொலைபேசிக்கு பதிலாக, வேறொரு பொலிஸ் கான்ஸ்டபிளின் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேல் தளத்தில் இருந்து சத்தம் கேட்டு அங்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் ‘ஹரக் கட்டாவை’ மடக்கிப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் குறித்த STF அதிகார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவு அத்தியட்சகரின் தலைமையில், கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட விசேட விசாரணைக் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்ற, முனிபாலகே ரவிந்து சந்தீப குணசேகர (97402) எனும் பொலிஸ் கான்ஸ்டபிளை க்ணடுபிடிக்க உதவுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய குறித்த நபர் தொடர்பில் தெரிந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0718591774
0718594929

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT