Thursday, May 9, 2024
Home » டிஜிட்டல் சேவை வரி தொடர்பில் இலங்கையுடன் கலந்துரையாடவில்லை

டிஜிட்டல் சேவை வரி தொடர்பில் இலங்கையுடன் கலந்துரையாடவில்லை

- ஒரு சில ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கு IMF விளக்கம்

by Rukshy Vinotha
July 13, 2023 12:05 pm 0 comment

இலங்கை உடனான தற்போதைய நிதியளிப்பு திட்டத்தில் டிஜிட்டல் சேவை வரித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என IMF தெரிவித்துள்ளது.

சர்வதேச கூட்டுத்தாபன வரிவிதிப்புக்கான OECD/G20 உள்ளடங்கிய கட்டமைப்பு உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமா இல்லையா என்பது குறித்து எந்தவொரு பரிந்துரையையும் வழங்கவில்லை என IMF இன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கையில் டிஜிட்டல் சேவை வரி தொடர்பான ஆலோசனைகள் தொடர்பான ஒரு சில ஊடக அறிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் IMF குறித்த அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு)/G20 உள்ளடங்கிய கட்டமைப்பானது BEPS (அடிப்படை நஷ்டம் மற்றும் இலாப மாற்றம்) 135 நாடுகளுக்கும் அதிகார வரம்புகளுக்கும் மேலாக வரி தவிர்ப்பை சமாளிக்கவும், சர்வதேச வரி விதிகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்குமாக 15 நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் ஒத்துழைப்பதோடு, வெளிப்படைத் தன்மையான வரிச் சூழலை உறுதி செய்ய வலியுறுத்துகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT