Sunday, April 28, 2024
Home » களனி பல்கலைக்கழகத்தில் பாலின வேறுபாடுகளுக்கான சர்வதேச மாநாடு

களனி பல்கலைக்கழகத்தில் பாலின வேறுபாடுகளுக்கான சர்வதேச மாநாடு

by gayan
July 7, 2023 5:02 pm 0 comment

களனி பல்கலைக்கழக பாலின ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பம்

பாலின வேறுபாடுகள் தொடர்பான இரண்டாவது சர்வதேச மாநாட்டை (ICGD ‘23) நடத்த களனி பல்கலைக்கழகத்தின் பாலின ஆய்வு மையம் தயாராகி வருவதால் அதுகுறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த மாநாட்டின் முதன்மை நோக்கம் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதும் சமத்துவத்தை மேம்படுத்துவதும் ஆகும். பாலின சமத்துவத்தை வளர்ப்பதில் சமூகங்கள் எதிர்கொள்ளும் பன்முக சவால்கள் மற்றும் பாலின வேறுபாடுகளை தெளிவுபடுத்தும் ஆய்வுக் கட்டுரைகளைச் சுற்றியே விவாதத்தின் மையப்புள்ளி உள்ளது.

பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் முறைகளை ஆராய்வதன் மூலமும், அந்தந்த பாலினக் கொள்கைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் விலைமதிப்பற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்க இந்த மாநாடு முயற்சிக்கிறது. இந்த நிகழ்வானது உள்ளூர் மற்றும் சர்வதேச அறிஞர்கள், உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் வெற்றிகரமான வழிமுறைகளின் தாக்கத்தை பெரிதுபடுத்தி, சகவாழ்வுக் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடக்கூடிய சூழலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில், பரந்த அளவிலான கருப்பொருள்களை உள்ளடக்கிய பல ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 70 இற்கும் மேற்பட்ட ஆக்கங்கள் பெறப்பட்ட நிலையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், இளங்கலை மாணவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களின் நுண்ணறிவுப் பங்களிப்புகளை கல்விச் சமூகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

ஆராய்ச்சி கருப்பொருள்களாவன:

பாலினம், நிலையானதன்மை, அபிவிருத்தி, கல்வி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, சக்தி மற்றும் சமத்துவம், ஆட்சி மற்றும் உரிமைகள், பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியம், ஊதிய இடைவெளி, ஊதியங்கள் மற்றும் அதிகாரமளித்தல், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, பாலினம் மற்றும் உலகளாவிய மோதல்கள்

ஜூலை 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் மாநாடு நடைபெறும். அனைத்து பங்கேற்பாளர்களும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கைப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா (Ms.AzusaKubota) மற்றும் முதுநிலைப் பேராசிரியரும் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான திருமதி நிலாந்தி டி சில்வா (Ms.NilanthiDe Silva) ஆகியோரால் வரவேற்கப்படுவார்கள்.

முதன்மை உரையை களனி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் புகழ்பெற்ற கல்வியாளரும் சிரேஷ்ட தலைவருமான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க (Professor Maithree Wickramasinghe) ஆற்றுவார்.

இலங்கை, இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் மியன்மார் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பர். பாலின சமத்துவமின்மையைத் தணிப்பதில் தனியார் துறையின் முக்கிய பங்கை ஆராய்வதற்காக, இந்தியாவின் பாடலி புத்ரா பல்கலைக்கழகத்தைச் (Patali Putra University )சேர்ந்த பேராசிரியர் சுனிதா ஷர்மாவின் சிறப்பு விரிவுரையும் இக்கருத்தரங்கில் இடம்பெறும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பாலின வேறுபாடுகளுக்கான தேசிய மாநாடு வெற்றி பெற்றதை அடுத்து, களனி பல்கலைக்கழகத்தில் பாலின கல்விக்கான மையம் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்தில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.இந்த மதிப்புமிக்க மாநாட்டின் மூலம் மதிப்பிற்குரிய ஆராய்ச்சியாளர்கள் எல்லைகளைத் தாண்டி, உலகளாவிய தளத்தில், தங்கள் விலைமதிப்பற்ற நிபுணத்துவத்தை வழங்குவார்கள்.

ஒரு தேசம் மற்றும் சமூகம் என்ற வகையில், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மிகவும் சமத்துவமான உலகத்தை வளர்த்து, பாலின வேறுபாடுகளைக் குறைக்க தேவையான அறிவு மற்றும் புரிதலுடன் நம்மைநாமே ஆயத்தப்படுத்த வேண்டியுள்ளது. சமத்துவம், ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலம் என்பவற்றின் மாற்றத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்வதே சிறந்தது.

கலாநிதி அனுஷா எதிரிசிங்க…?

இயக்குனர்- பாலின ஆய்வு மையம்

களனி பல்கலைக்கழகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT