சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் இசுறு உதான

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் இசுறு உதான-Isuru Udana Retires From International Cricket

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரர் இசுறு உதான அறிவித்துள்ளார்.

இது தொடர்பான தனது கடிதத்தை இசுறு உதான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக, அதன் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

 

 

33 வயதான இசுறு உதான இலங்கை ரி20 அணியில் விளையாடி வந்ததோடு, 35 ரி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 256 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, 27 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

21 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 237 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

2009 ரி20 உலகக் கிண்ண தொடரில் அறிமுகமான இசுறு உதான, 2017 முதல் தொடர்ச்சியாக அணியில் இடம்பிடித்து வந்தார்.

தென்னாபிரிக்காவுடனான ரி20 போட்டியில் 48 பந்துகளில் 84 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றமையே அவரது சிறந்த பெறுதியாகும்.

அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியில் கடந்த 3 மாதங்களில் ஓய்வு பெறும் இரண்டாவது வீரர் இசுறு உதான ஆவார். கடந்த மே மாதம் திசர பெரேரா சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...