அட்டுலுகமவில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

அட்டுலுகமவில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு-Isolation Status of 9 GN Divisions in Atulugma Will be Lifted Tomorrow

நாளை (27) அதிகாலை 5.00 மணி முதல், அட்டுலுகம பிரதேசத்திலுள்ள 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் எஹலியகொடையிலுள்ள, மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய விடுவிக்கப்படும் பிரதேசங்கள்...

களுத்துறை மாவட்டம்
பண்டாரகம பிரதேச செயலகம் - அட்டுலுகம பிரதேசம்:

  • 659 E - போகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • 659 C - பமுணுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • 657 A - கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • 659 B - கொரவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • 660 - பமுணுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • 659 - அட்டுலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • 659 E - அட்டுலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • 660 A - எபிட்டமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
  • 659 D - கல்கெமன்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டம்
எஹலியகொடை பிரதேச செயலகம்

  • மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு


Add new comment

Or log in with...