Saturday, March 16, 2019 - 10:56am
பதுளை, ஹாலி எல, வெலிமடை, பசறை ஆகிய பிரதேசங்களில் இன்று (16) காலை சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று காலை 8.15 - 8.20 இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
பாரிய சத்தத்துடன் 3 - 5 செக்கன்களுக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
Add new comment