அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக இருந்த டேவிட் வார்னர், அண்மையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இருந்தபோதும் T20 போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்காக களமிறங்குவேன் என்று அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பிக் பாஷ் லீக், ஐபிஎல் போன்ற T20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன் என்றும் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.
டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுள்ளதால், அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்க விருப்பத்துடன் இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:
டெஸ்ட் போட்டிகளில் நான் தொடக்க வீரராக விளையாடுவதற்கு தயாராக உள்ளேன். தொடக்க வீரராக களமிறங்கினால் மகிழ்ச்சியுடன் இருப்பேன். நிச்சயமாக தொடக்க வீரராக களம் இறங்குவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன். அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழுவினர் என்னிடம் இதுகுறித்து பேசுவார்கள் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.