துருக்கி விமானத்தை சேதப்படுத்திய ஶ்ரீ லங்கன் விமான சேவை கொள்கலன்

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து செல்ல தயாராகி கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான A330-300 வகை TK-6050 எனும் சரக்கு விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானம் துருக்கியின் இஸ்தான்பூலில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

45 மெட்ரிக் தொன் எடையுள்ள ஆடைகளை ஏற்றிக்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துருக்கியின் இஸ்தான்பூல் நகருக்கு புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பலத்த காற்று நிலை காரணமாக இந்த விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்று ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிலைய செயற்பாட்டாளர்களால் உரிய முறையில் குறித்த விமானத்திற்கு அருகில் நிறுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது  வீசிய பலத்த காற்றினால் குறித்த கொள்கலன் விமானத்தை நோக்கி நகர்ந்து அதன் எஞ்சினில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த விமானத்தின் வலது பக்க எஞ்சின் இலக்கம் 02 இல் 5 அங்குல உயரம் 7.5 அங்குல அகலத்திற்கு சேதமடைந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையம் தரைக் கையாளுதல் ஊழியர்களின் (Bad Ground Handling) திறமையற்ற மற்றும் பொறுப்பற்ற செயல் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தங்கள் விமானங்களுக்கு எரிபொருளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஆகிய காரணத்தினால், இலங்கையுடனான விமான நடவடிக்கைகளை இடைநிறுத்துவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.யஉ


Add new comment

Or log in with...