கோதுமை மா மீண்டும் ரூ. 17.50 இனால் அதிகரிப்பு

நவம்பர் 27 முதல் கோதுமை மா மீண்டும் ரூ. 17.50 இனால் அதிகரிப்பு-Price of Wheat Flour Increased by Rs 17.50

- நவம்பர் 27 முதல் அமுல் என பிறிமா அறிவிப்பு

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 17.50 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகிய பொருட்கள், கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான வர்த்தமானியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி கோதுமை மாவின் விலை ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டிருந்து.

அதனைத் தொடர்ந்து பாணின் விலை ரூபா 5 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

தற்போது மீண்டும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பட்டிருப்பதன் காரணமாக பாணின் விலையை இன்று (29) முதல் மேலும் ரூபா 5 இனால் அதிகரிப்பதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.