பாணின் விலை ரூ. 5 இனால் அதிகரிப்பு | தினகரன்


பாணின் விலை ரூ. 5 இனால் அதிகரிப்பு

பாணின் விலை ரூ. 5 இனால் அதிகரிப்பு-Loaf of bread price increased by Rs. 5wheat flour

பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்
கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் மாற்று யோசனை

450 கிராம் நிறை கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை 05 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (20) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன அறிவித்துள்ளார்.  

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 08 ரூபாவினால்  கடந்த 17ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாணின் விலையை 05 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளமை காரணமாக, கோதுமை மாவை இறக்குமதி செய்ய மாற்று வழிகளை மேற்கொள்ள அரசாங்கம் யோசனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, வேறு தரப்பினருக்கு அதற்கான அனுமதியை வழங்குவதற்கும், அதற்கான வரிகளை குறைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பது தொடர்பில் புதிய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென, சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...