ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்ற லெபனானுக்கு இந்தியா உதவி

ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்ற லெபனானுக்கு இந்தியா உதவி -India Helps Lebanon to Evacuate Their Citizen From Afghanistan

ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்ற ஏனைய நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது. தனது குடிமகனை வெளியேற்றியதற்கு உதவியதற்காக லெபனானின் வெளியுறவு மற்றும் குடியேற்ற அமைச்சு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது.

லெபனான் பிரஜையான , முஹம்மது கட்டாப் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய நிறுவனமான ஒரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரெம்ப்ளினில் பணிபுரிந்தார்.

"டிரெம்ப்ளினில் பணிபுரியும் லெபனான் பிரஜை முஹம்மது கட்டாப்பை வெளியேற்றுவதற்காக ஆப்கானிஸ்தான் கடினமான சூழ்நிலையில் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளுக்கு வெளியுறவு மற்றும் குடியேற்ற அமைச்சு நன்றி தெரிவிக்கிறது என லெபனான் வெளியுறவு மற்றும் குடியேற்ற அமைச்சு டுவிட்டரில் பதிவேற்றியுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டில் மனிதாபிமான நெருக்கடி நிலை உருவாகி வருகிறது. ஒடுக்குமுறை தலிபான் ஆட்சியானது பல ஆப்கானியர்களையும் மற்ற நாடுகளின் குடிமக்களையும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த லெபான் பிரஜை இந்தியப் பிரஜைகளுடன் புதுடில்லிக்கு இந்திய இராணுவ விமானத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, காபூலில் இருந்து சுமார் 300 பேர் வெளியேறினார்கள். ஆகஸ்ட் 15 ஆம் திகதி தலிபான் குழு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது, ஆப்கானிஸ்தான் அரசு வீழ்ச்சியடைந்த பின்னர், ஜனாதிபதி அஷ்ரப் கானி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பிச் சென்றார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு. தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பழிவாங்கல் கொலை அச்சுறுத்தலுக்குப் பயந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...