PHI அதிகாரி மீது எச்சில் உமிழ்ந்த கொரோனா நோயாளி; கடமைக்கு இடைஞ்சல்

- அட்டுலுகமவில் சம்பவம்; பொலிஸ் விசாரணை

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையின் கீழ் சிறப்பு பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நபரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்காக சென்றபோது சுகாதார பரிசோதகர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் எச்சில் துப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது

இந்தச் சம்பவத்தின் பின்னர் அந்த பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரையும் 14 நாட்கள் வரை சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் சிறப்பு பொலிஸ் குழுவினர் சம்பவம் குறித்த துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.


Add new comment

Or log in with...