கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பூட்டு (UPDATE)

வெளிச் செல்லும், பயண வழிமாற்ற, சரக்கு விமானங்கள் சேவையில்

நாளை (18) நள்ளிரவு (19) முதல் 31 ஆம் திகதி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தறையிறங்குவது இடைநிறுத்தப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அத்துடன் விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் விமானங்கள், பயண வழிமாற்ற விமானங்கள் (Transit) ஆகியன தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன சரக்கு விமானங்களின் (Cargo) சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என, சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.


2:34pm

இன்று (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு வாரங்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இலங்கைக்கு வரவிருந்த அனைத்து விமானங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு இந்தியாவின் தம்பதிவ யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்ற 891 பயணிகளை இரண்டு விசேட விமானங்கள் மூலம் விரைவாக இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...