கட்டார், பஹ்ரைன், கனடா பயணிகளுக்கு இலங்கை வரத் தடை | தினகரன்


கட்டார், பஹ்ரைன், கனடா பயணிகளுக்கு இலங்கை வரத் தடை

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் அனைத்துப் பயணிகளுக்கும் இலங்கைக்கு வருகை தருவதற்கான அனுமதி 14 நாட்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இன்று (17) நள்ளிரவு முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் குறித்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் பரிமாற்ற விமானங்கள் (Transit)  மூலம் மற்றுமொரு நாட்டிற்கு செல்வதற்கு இத்தடை அமுல்படுத்தப்படாது.

இதேவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...