விடுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் பலி

விடுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் பலி-Murder at Club-Mount Lavinia

கல்கிஸ்ஸை பகுதியிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற சண்டையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (03) அதிகாலை கல்கிஸ்ஸை, சேரம் வீதியிலுள்ள குறித்த விடுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு இம்பெற்ற சண்டையொன்றில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர், காலி வீதி, ஹொரைதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...