அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியோர் கைது | தினகரன்


அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியோர் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கூடாக 50கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அத்துருகிரியவூடாக வெளியேறிய வெள்ளை நிற ஜீப் வண்டி மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவ்வாகனத்தை சோதனையிட்டபோதே அதற்குள்ளிருந்து 50கிலோகிராம் ஹெரோயினை மீட்டுள்ளனர்.  

இப்போதைப் பொருள் சிறிய பக்கற்றுக்களாக பொதி செய்யப்பட்டிருந்ததுடன் அவை இரண்டு உரப்பைகளுள் இட்டு மூடி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சம்பவத்தின்போது ஜீப் வண்டியில் இருந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளையைச் சேர்ந்த சமிந்த தில்ருக் (38) மற்றும் நுகேகொடையைச் சேர்ந்த மங்கல சிசிர குமாரசிறி (38) எனும் இருவரே சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.  

மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தலுக்காக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களென்றும் தெரியவந்துள்ளது. 

லக்ஷ்மி பரசுராமன்  

 


Add new comment

Or log in with...