Friday, April 26, 2024
Home » மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம் என்ற கண்காட்சியை திறந்து வைக்கின்றது
MMCA இலங்கை '88 ஏக்கர்கள்:

மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம் என்ற கண்காட்சியை திறந்து வைக்கின்றது

by mahesh
December 13, 2023 6:30 am 0 comment

நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA இலங்கை), ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ என்ற தலைப்பில் தனது புதிய கண்காட்சியை கொழும்பு 3 இல் அமைந்துள்ள கிரஸ்கட் பூலவார்ட் தரைத்தளத்தில் திறந்து வைத்தது. ஷாமினி பெரேரா மற்றும் ரிசல் மாசலீன் ஆகியோரின் எடுத்தாளுமையின் கீழ், துணை எடுத்தாளுநர்கள் தினால் சஜீவ மற்றும் நிமாயா ஹரிஸ் அவர்களுடன், ‘88 ஏக்கர்கள்’ ஆனது MMCA இலங்கையின் முதலாவது சுய கண்காட்சியாகும். இக் கண்காட்சி வடபுழுவ வீட்டுத்திட்டத்தையும், இலங்கையின் கட்டடக்கலைஞரான மினெட் டி சில்வாவின் (1918–1998) முன்னோடியான பணியையும் காட்சிப்படுத்துகின்றது.

இக் கண்காட்சியானது, மினெட் டி சில்வாவினால் வடிவமைக்கப்பட்டு, 1958ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட வடபுழுவ வீட்டுத் திட்டத்தை குறிப்பாக நோக்குகின்றது. இத் திட்டமானது இலங்கையில் ஒரு புதிய அமைப்பிலான சமூக வீட்டுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத் திட்டமானது வதிவாளர்களின் பங்களிப்பையும் கொண்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். மலைப்பகுதியில் கட்டப்பட்ட இப்பரந்த அபிவிருத்தி திட்டமானது, எவ்வாறு வெவ்வேறு இன-மத மக்களைக் கொண்ட இலங்கை அரச ஊழியர்களுக்காக, தொலைநோக்கு பார்வையுடன் குறைந்த விலையில் வடிவமைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT