தோட்ட காணியை தனிநபர் ஆக்கிரமிப்பு; மக்கள் ஆர்ப்பாட்டம் | தினகரன்

தோட்ட காணியை தனிநபர் ஆக்கிரமிப்பு; மக்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட காணியை தனிநபர் ஆக்கிரமிப்பு; மக்கள் ஆர்ப்பாட்டம்-Hatton Dickoya Estate Worker Protest

 

ஹட்டன், டிக்கோயா தோட்டத்திற்கு சொந்தமான டன்பார் பிரிவில் உள்ள ஐந்து ஏக்கர் காணியினை தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டன்பார் தோட்டத்தொழிலாளர்கள் இன்று (04) ஹட்டன் எபோஸ் பிரதான வீதியினை டன்பார் சிறுவர் பாராமறிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியினை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

குறித்த தோட்டத்தில் சுமார் 350 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதாகவும் ஐம்பது, நூறு வருடங்களுக்கு  மேலாக பரம்பரை பரம்பரையாக இந்த தோட்டத்தில் உள்ள லயன் அறைகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஐந்து பேர் வரை வாழ்வதாகவும் இதனால் பெரும் சிரமத்திற்கு மத்திலேயே இருப்பதாகவும் அவ்வாறு இருக்கும் போது தங்களுக்கென்று ஒரு துளியளவு நிலம் கூட வழங்காது, பரம்பரையாக உழைத்த தோட்டத்தில் உள்ள காணிகளை தோட்டத்திற்கு எவ்விதத்திலும் சம்மதம் இல்லாத ஒருவர் தோட்ட காணியினை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடுவதாகவும் இதனால் இவர்களின் வாழ்தாரம் பாதிப்புக்குள்ளாகுவதாகவும் தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

தோட்ட காணியை தனிநபர் ஆக்கிரமிப்பு; மக்கள் ஆர்ப்பாட்டம்-Hatton Dickoya Estate Worker Protest

சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் கருத்து தெரிவிக்கையில்.

குறித்த காணியில் வேலை செய்யுமாறு தோட்ட நிர்வாகம் பணித்து வருகிறது தோட்ட தொழிலாளர்கள் இந்த தேயிலை காணிக்கு வேலைக்கு சென்றால் குறித்த நபர் தனது செல்வாக்கினை பயன்படுத்து பொலிஸாரினை வரவழைத்து கைது செய்வதாக அச்சுறுத்தி வருவதாகவும் தொழிலாளர்கள் தங்களது தேவைகளுக்கு நகரங்களுக்கு செல்லும் போது பல்வேறு நபர்களை கொண்ட தொழிலாளர்களை மிரட்டி வருவதாகவும் இது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் இவர்கள் தெரிவித்தனர்.

தோட்ட காணியை தனிநபர் ஆக்கிரமிப்பு; மக்கள் ஆர்ப்பாட்டம்-Hatton Dickoya Estate Worker Protest

இந்த காணி பிரச்சினை தொடர்பாக  ஜனாதிபதி முதல் நுவரெலியா மாவட்ட அரசியல் தலைவர்கள் முன்வந்து தீர்த்து தர வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் மாகாண சபை தேர்தலுக்காக வேறு எந்த தேர்தலுக்காகவோ தோட்டத்தின் பக்கம் வரக்கூடாது அவ்வாறு வந்தால் தாங்கள் மாற்று நடவடிக்கை எடுப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கும் அதே இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வந்து தோட்ட காணி பெற்றுக்கொடுக்காவிட்டால் டிக்கோயா தோட்டத்திற்கு சேர்ந்த அத்தனை பிரிவினையும் இறக்கி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் இவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இது குறித்து தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் டன்பார் தோட்டம் என்பது ஒரு பெரிய தோட்டமாகும். இதனை பலர் ஆக்கிமித்து இன்று சிறிய தோட்டமாக மாறியுள்ளது. இந்த தோட்டத்தில் இன்று ஒரு குடும்பத்தில் நான்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அந்த சந்தததியினர் இந்த தோட்டத்தி;ல் தான் வாழ வேண்டும் இவ்வாறு காணிகள் தனிநபர் ஆக்கிரமிக்க முற்பட்டால் எங்களது வாழ்வாதாரம் இல்லாது போய்விடும் அப்போது நாங்கள் தோட்டத்தை விட்டு எங்கும் செல்ல முடியாது நாங்கள் இங்கு தான் வாழ வேண்டும் இதற்கு அரசியல் தலைவர்கள சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும், என தெரிவித்தார்.

மற்றுமொருவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இன்று தோட்டங்கள் ஐம்பது வருடங்களுக்கு மேலாக வேலை செய்து அவர்களின் பிள்ளைகள் தான் வேலை செய்து கொண்டு இருக்கிறர்கள். அவர்கள் இன்னும் குடிகளில்தான் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கென்று வீடுகள் கிடையாது.

அவ்வாறு வீடமைப்பு திட்டம் ஒன்றுக்காக இந்த காணிகளை பெற்றுக்கொடுத்திருந்தால் நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்கியிப்போம் ஆனால் இன்று பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து இரவு இரவாக வந்து தூண்களை இடுகிறார்கள் அந்த தேயிலை தலையில் வேலை செய்பவர்களை மிரட்டுகிறார்கள் எனவே இது குறித்துசரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(ஹட்டன் விசேட நிருபர் - ஹட்டன் கே.சுந்தரலிங்கம்)

 


Add new comment

Or log in with...