Sunday, April 28, 2024
Home » மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கம் ஏற்பாட்டில் உலக நீரிழிவு தின வைபவம்

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கம் ஏற்பாட்டில் உலக நீரிழிவு தின வைபவம்

by sachintha
November 23, 2023 6:14 am 0 comment

உலக நீரிழிவு தினமானது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் அவரது நீரிழிவு நிலையத்தில் அ.நித்தியானந்தமனுநீதி தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கா.பார்த்தீபன், அ.கிருஷ்ணமூர்த்தி, செ.கெங்கதாரன், பேராசிரியர் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன், வைத்திய அத்தியட்சகர் ((MS) டொக்டர் எஸ் .ஸ்ரீபவானந்தராஜா, வைத்தியப் பணிப்பாளர் டொக்டர் என்.ஜெயக்குமார், சுகாதார வைத்திய அதிகாரி, தெல்லிப்பழை டொக்டர் பி. கே. நவரட்ணராஜா, வைத்திய அதிகாரி எஸ்.கிரிதரன், தாதியபரிபாலகர் செல்வி.கி.கயறூபி மற்றும் ஏனைய தாதிகள், பணியாளர்கள், நீரிழிவு மையத்தின் நோயாளிகளும் கலந்து கொண்டார்கள்.

நித்தியானந்தமனுநீதி தனது தலைமை உரையில் மூளாய் நீரிழிவு மையத்தின் சேவைகள் பற்றிக் கூறினார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தனது உரையில், தெற்றாநோய்களில் ஒன்றான நீரிழிவுநோயின் பரவல் இலங்கையில் 23 வீதம் அதிகரித்துள்ளது எனவும் இந்நோயானது மனிதனின் கண், சிறுநீரகம், இதயம், நரம்பு மற்றும் கால் ஆகிய அங்கங்களை பாதிப்பதோடு, அதன் அறிகுறிகளாக அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக களைப்பு, அடிக்கடி பசி ஏற்படுதல், குணமாகாத காயங்கள், கண்பார்வை மங்கலாகுதல் மற்றும் கை, கால்களில் நடுக்கம் என்பன காணப்படுகின்றன என்றும் அதனைத் தடுப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்ட உணவுப் பழக்கவழக்கங்கள், முறையான உடற்பயிற்சி, மருந்துகள், வைத்திய ஆலோசனைகள் மற்றும் மனோரீதியான ஆரோக்கியம் என்பன முக்கியமானவை எனத் தெரிவித்தார்.

வைத்தியப்பணிப்பாளர் டொக்டர் ஜெயக்குமார், நவரட்ணராஜா, கிரிதரன் மற்றும் செல்வி.கி. கயறூபி ஆகியோர் தமது உரையில் நீரிழிவு நோயின் பாதிப்புகள் மற்றும் அதன் முகாமைத்துவம் பற்றி விளக்கிக் கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து பிராந்திய சுகாதார பணியகம் வெளியிட்ட ஆரோக்கிய சபதத்தை அனைவரும் எழுந்து நின்று கூறியது விழாவை சிறப்பித்தது. நீரிழிவு மையத்தின் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

அதில் உலக நீரிழிவு தினத் தை முன்னிட்டு கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கம் மூளாய் 10மூ விலைக்கழிவினை (HBA1C, Lipid profile, Serum Creatinine, U.M.A) வழங்கியது.

நீரிழிவு நிலையமானது Ratnam Foundation (UK) இன் அனுசரணையுடன் 2005 ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT