Home » 20 புதுமைமிகு தயாரிப்புக்களுடன் எபிக் லங்கா 25 வருடகால டிஜிட்டல் மயமாக்கல் உத்தியை வெளியிடுகின்றது

20 புதுமைமிகு தயாரிப்புக்களுடன் எபிக் லங்கா 25 வருடகால டிஜிட்டல் மயமாக்கல் உத்தியை வெளியிடுகின்றது

by Gayan Abeykoon
November 15, 2023 1:14 am 0 comment

பிக் லங்கா, முற்றிலும் இலங்கைக்குச் சொந்தமான fintech தீர்வுகள் வழங்கும் நிறுவனமான தொழில்துறையில் கால் நூற்றாண்டு அனுபவத்தைக் கொண்டுள்ளது.

எபிக்கின் நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் நிதி தொழில்நுட்பத் துறையில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புமே அவர்கள் இந்த மைல்கல்லை அடைந்து சிறந்து விளங்குதற்கு காரணமாக அமைகின்றது.

திட்டத்தால் இயங்கும் நிறுவனமாக அதன் வேர்களில் இருந்து உருவாகி, எபிக் இப்போது 20 தனித்துவமான அறிவுசார் பண்புகளின் (IPs) குறிப்பிடத்தக்க போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது. உலகளாவிய ஐவு அரங்கில் ஒரு வல்லமைமிக்க வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, இந்த IPs ஏனைய முன்னணி மென்பொருள் வர்த்தகநாமங்களுடனான மூலோபாய கூட்டாண்மை மூலம் வெளிநாட்டு சந்தைகளில் ஊக்குவிக்கப்பட்டு, IP அறிவு மற்றும் தீர்வுகள் மையமாக இலங்கையின் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

கடந்த 25 ஆண்டுகளில், எபிக் 6,000 இற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது, 3,000 பயிற்சியாளர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கியுள்ள அதேவேளை முக்கியமாக உள்ளூர் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளைக் கொண்டுள்ளது. டொமைன் நிபுணத்துவத்தின் தொழில்துறை தலைவர், எபிக் மூலமான புதுமையான தீர்வுகள் அரசு நிறுவனங்களை நவீனமயமாக்கியுள்ளதுடன் , பணம் செலுத்தும் முறைமையையும் மாற்றியுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT