‘இது பாஜக வெற்றி அல்ல: மின்னணு இயந்திரங்களின் வெற்றி’ | தினகரன்

‘இது பாஜக வெற்றி அல்ல: மின்னணு இயந்திரங்களின் வெற்றி’

 

கர்நாடக மாநிலத்தில் பாஜக பெற்ற வெற்றி அந்தக் கட்சயினுடைய வெற்றி அல்ல, அது மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கான வெற்றி. எங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''கர்நாடக மாநிலத்தில் பாஜகவினர் பெற்ற வெற்றி அவர்கள் பெற்ற வெற்றி அல்ல. அது மின்னணு வாக்கு இயந்திரங்களின் வெற்றியாகும். மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் இருக்கிறது.

இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது. இடைத் தேர்தலில் தோல்வியுற்ற பாஜக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுகிறது.

நீங்கள் உங்களை நம்பினால், மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்துவதை கைவிட்டு வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்தி வெற்றி பெறுங்கள்.

தேர்தல்கள் வரலாம் போகலாம் ஒரு சிலநேரங்களில் வெற்றி பெறலாம். ஒரு சில நேரத்தில் தோல்வி அடையலாம். உத்தவ் தாக்கரேயின் கருத்தை நவநிர்மான் சேவானா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேயும் வரவேற்றுள்ளார்.


Add new comment

Or log in with...