ஆணைக்குழு இறுதி அறிக்கை விவாதம் தேர்தலுக்கு முன் | தினகரன்

ஆணைக்குழு இறுதி அறிக்கை விவாதம் தேர்தலுக்கு முன்

 

பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைகள் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபபட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

தெனியாயவில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதனைத் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (29) சபாநாயகருக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகவும், சபாநாயகரிடம் இது குறித்து அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தலுக்கு முன்னர் பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் அறிக்கைகள் தொடர்பான விவாதத்தை தேர்தலுக்கு முன்னர் வைக்க முடியுமா என ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுப்பதாக தெரிவித்திருந்தார்.

குறித்த விவாதம், எதிர்வரும் பெப்ரவரி 20, 21 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...