2nd ODI: SLvZIM; சிம்பாப்வே அணி 290 ஓட்டங்கள் குவிப்பு | தினகரன்

2nd ODI: SLvZIM; சிம்பாப்வே அணி 290 ஓட்டங்கள் குவிப்பு

(சிக்கந்தர் ராசா அரைச்சதத்தை பூர்த்தி செய்த போது)

 

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் முக்கோண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பகலிரவு போட்டி தற்போது டாக்காவின் மிர்பூர் விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.

தொடரின் இரண்டாவது போட்டியில், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற் இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்கைள பெற்றது.

இதே மைதானத்தில் பங்களாதேஷ் அணியுடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இத்தொடரின் முதல் போட்டியிலும் பார்க்க சிறப்பான துடுப்பாட்டத்தை பங்களாதேஷ் அணி வெளிப்படுத்தியிருந்தது.

அவ்வணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சிக்கந்தர் ராசா, ஆட்டமிழக்காமல் 67 பந்துகளில் 81 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் அசேல குணரத்ன 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சிம்பாப்வே 290/6 (50.0)
சிக்கந்தர் ராசா 81*
ஹமில்டன் மசகட்சா 73
பிரண்டன் டெய்லர் 38

அசேல குணரட்ன 3/37
திசர பெரேரா 2/43
சுரங்க லக்மால் 1/70

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 14 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு, இன்னும் 36 ஓவர்களில் 217 ஓட்டங்களை பெற வேண்டும்.

இலங்கை 69/3 (13.0)
குசல் பெரேரா 56*
உபுல் தரங்க 11
அஞ்சலோ மெத்திவ்ஸ் 6*

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...