இராஜினாமா முடிவை ஒத்திவைத்தார் ஹரிரி | தினகரன்

இராஜினாமா முடிவை ஒத்திவைத்தார் ஹரிரி

லெபனானுக்கு திரும்பியுள்ள அந்நாட்டு பிரதமர் சாத் ஹரிரி தனது இராஜினாமா முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். இரு வாரத்திற்கு முன் சவூதி அரேபியாவில் வைத்து அவர் வெளியிட்ட இராஜினாமா அறிவிப்பு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. லெபனான் ஜனாதிபதி மைகெல் அவுனை புதன்று சந்தித்த பின்னரே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை இராஜினாமா முடிவை நிறுத்திவைக்கும்படி ஜனாதிபதி அறிவுறுத்தியதாக ஹரிரி குறிப்பிட்டுள்ளார்.

இராஜினாமா அறிவிப்புக்கு பின் ஹரிரி தொடர்ந்து சவூதியில் தங்கி இருந்தது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது. இந்நிலையில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினார். ஈரானுடனான பிராந்திய அதிகார போட்டியில் ஈடுபடும் சவூதி அரேபியாவே அவரை இராஜினாமா செய்ய அழுத்தம் கொடுத்ததான சந்தகேத்தை அவர் நிராகரித்திருந்தார். 


Add new comment

Or log in with...