மதுரங்குளி விபத்து; பஸ் சாரதிக்கு விளக்கமறியல் | தினகரன்

மதுரங்குளி விபத்து; பஸ் சாரதிக்கு விளக்கமறியல்

 

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் மதுரங்குளிப் பகுதியில் நேற்று (06) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதிக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

ஏழு பேரை பலியாகி, 42 பேர் காயமடைந்த குறித்த விபத்து தொடர்பில் சாரயின் கவனயீனமே காரணம் என பொலிசார் அவரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதி இன்றைய தினம் (07) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கியிருந்தார்.

குறித்த பஸ், 10ஆம் கட்டைக்கும் மதுரங்குளிக்கும் இடையில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...