முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு நினைவு நாள் அனுஷ்டிப்பு | தினகரன்

முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு நினைவு நாள் அனுஷ்டிப்பு

 
1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் நினைவுநாள் அனுஷ்டிப்பை இன்று (30) காலை யாழ் ஐந்து சந்தி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது அப்பகுதியில் பெய்த கடும் மழைக்கு மத்தியிலும் ஒன்று கூடிய யாழ். முஸ்லிம் மக்கள், ஒக்டோபர் 30 ஆம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம் ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்தனர்.

அத்துடன் தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இன்றுடன் 27 வருடங்கள் கடந்தபின்பும் இலங்கை அரசு மட்டத்தில் அவர்களின் அபிலாசைகளை மதிக்கத்தக்க, அவர்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆறாத்துயரமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே தான் எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் யாழ். மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்த்தலில் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். என இதன் போது ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

(பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்)

 


Add new comment

Or log in with...