இணைய வரி, மோட்டார் சைக்கிள் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் குறைப்பு | தினகரன்


இணைய வரி, மோட்டார் சைக்கிள் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் குறைப்பு

 
இணைய பயன்பாடு தொடர்பில் அறவிடப்பட்டு வந்த 10% தொலைதொடர்பாடல் வரியை முழுமையாக நீக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
 
தற்பொழுது நிதியமைச்சில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே நிதியமைச்சரும் வெகுஜன ஊடக அமைச்சருமான மங்கள சமரவீர இதனை அறிவித்தார்.
 
அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் குறித்த வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, 150 CC இற்கும் குறைவான மோட்டார் சைக்கிள் மீதான வரி 90% இனால் குறைக்கப்படுவதாகவும் குறித்த வரி குறைப்பு இன்று நள்ளிரவு (18) முதல் குறைக்கப்படுவதாக அமைச்சர் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
அத்துடன் லொறி மற்றும் சிறிய வகை கெப் வாகனங்கள் மீதான வரியை ரூபா 10 இலட்சத்திலிருந்து ரூபா 7 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குறித்த வரி ரூபா 3 இலட்சத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...