Home » அழகிய நுவரெலியாவின் வசந்தகால மலர் கண்காட்சி – 2024

அழகிய நுவரெலியாவின் வசந்தகால மலர் கண்காட்சி – 2024

by Prashahini
April 22, 2024 11:20 am 0 comment

நுவரெலியா மாநகர சபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் அழகிய நுவரெலியா வசந்த காலத்தை ஒட்டி அழகிய நுவரெலியா வசந்த மலர் கண்காட்சி – 2024 (20 – 21) விக்டோரியா பூங்காவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இலங்கையின் காலனித்துவ ஆட்சியின் போது, 1937 இல், இலங்கையில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் விவசாயிகளின் மனைவிகளால் தொடங்கப்பட்ட வருடாந்த விலங்கு ,காய்கறி மற்றும் மலர் கண்காட்சி, நுவரெலியா நகரின் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நுவரெலியா மாநகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி மற்றும் பொது கண்காட்சிக்கான விழா ஏறத்தாழ நாற்பது வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சி.பி.ரத்நாயக்க மற்றும் இந்திய மேலதிக உயர்ஸ்தானிகர் (கண்டி) குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் ஆதிரா சரசன் ஆகியோர் தலைமையில் 2024 வசந்த மலர் கண்காட்சி நேற்று முன்தினம் (20) காலை உத்தியோகபூர்வ ஆரம்பமானது.

உள்ளகத் தோட்டங்கள் மற்றும் வெட்டுப் பூக்கள் போன்ற வடிவங்களில் பல கூறுகளை உள்ளடக்கிய வசந்த மலர் கண்காட்சியின் பரிசளிப்பு விழாவில் நேற்று (21) நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நுவரெயா மாநகரசபையின் முன்னால் நகர முதல்வர்கலான நளின் திலக ஹேரத், மஹிந்த தொடம்பே கமகே சந்தன லால் கருணாரத்ன, மற்றும் நுவரெலியா மாநகரசபையின் பதில் மாநகர ஆணையாளரும் மேலதிக மாவட்ட செயலாளருமான (நிர்வாகம்) திருமதி சுஜீவா போதிமான்ன அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான அதிதிகள் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வசந்த மலர் கண்காட்சியை காண உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருப்பது சிறப்பம்சமாகும்

இதேவேளை மலர்கண்காடசியில் பங்குபற்றிவர்களுக்கு கேடயங்களும் பணபரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன..

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT