Tuesday, April 30, 2024
Home » தருமபுரம் ஆதினத்தை மிரட்டியவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!

தருமபுரம் ஆதினத்தை மிரட்டியவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!

by Gayan Abeykoon
April 11, 2024 11:00 am 0 comment

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பா.ஜ.க நிர்வாகி அகோரத்தின் பிணை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிகவும் ப​ைழமையான மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் 27 ஆவது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரின் உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை பொலிஸ் கண்காணிப்பாளருக்கு புகார் மனு ஒன்றை கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி அளித்துள்ளார்.

அதில், தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஓடியோ இருப்பதாகக் கூறி   வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியதாகவும், அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ க தலைவர் அகோரம் உள்ளிட்டோர் உடைந்தையாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட அகோரம் பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி T. V. தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அகோரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தற்போது வரை தலைமறைவாக இருப்பதாகவும், அவருக்கு பிணை வழங்கக் கூடாது என ெபாலிஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிணை மறுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT