Home » முதுமாணி கற்கையை பூர்த்தி செய்த பொறியியலாளர்
லண்டனில்

முதுமாணி கற்கையை பூர்த்தி செய்த பொறியியலாளர்

by Gayan Abeykoon
March 29, 2024 8:45 am 0 comment

லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் Advanced Product Design Engineering and Manufacturing எனும் துறையில் முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்து முதலாவது முஸ்லிம் பெண் இயந்திர பொறியியலாளர் எனும் பெருமையை திருகோணமலையின் மூதூரைச் சேர்ந்த ஸதீபா முஸ்னா முகம்மட் முனாஸ் பெற்றுள்ளார்.

29 வயதான இவர், கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி, மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயம், மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயம், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி கற்று, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

இதன் பின்னர் லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் Advanced Product Design Engineering and Manufacturing முதுமாணிக் கற்கையில் இவர் சிறப்பு சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT