Sunday, May 19, 2024
Home » இறக்குமதி வெங்காயம், அரிசிக்கு விசேட பண்டங்கள் வரி குறைப்பு

இறக்குமதி வெங்காயம், அரிசிக்கு விசேட பண்டங்கள் வரி குறைப்பு

by Gayan Abeykoon
March 29, 2024 8:41 am 0 comment

அரிசி, வெங்காயம் என்பவற்றுக்கான விசேட பண்டங்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரி, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும்  வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கான வரி 70 ரூபாவாக காணப்பட்டது.இந்தியா, பாகிஸ்தான் என்பன பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன. இருந்தபோதும், இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயத்தை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியுமென இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டிருந்த பண்டங்கள் வரியை குறைக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வரி குறைப்பு ஏப்ரல் 30 வரை அமுலில் இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இறக்குமதியாகும் ஒருகிலோ அரிசிக்கான 65 ரூபா விசேட பண்டங்கள் வரி, ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT