Thursday, May 9, 2024
Home » கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்குடியில் இப்தார்!

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்குடியில் இப்தார்!

- 5,000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்பு

by Rizwan Segu Mohideen
March 23, 2024 4:27 pm 0 comment

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (22) வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் கிழக்கில் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேற்றைய இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், செயிட் அலி ஸாஹிர் மௌலானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சமமேளனம்,ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் ஆகியோருக்கு குரான் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இப்தார் மாதத்தை முன்னிட்டு காசா குழந்தைகள் தொடர்பான ஜனாதிபதியின் நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ரூ. 5 இலட்சம் நிதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காசா சிறுவர்கள் நிதியத்துக்கு ஆளுநர் செந்தில் 5 இலட்சம் ரூபா நன்கொடை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT