Thursday, May 9, 2024
Home » டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26

- செயற்படுத்துதல் - வலுவூட்டுதல் - வளப்படுத்துதல்

by Rizwan Segu Mohideen
March 22, 2024 4:53 pm 0 comment

இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கை தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடு (Digital Public Infrastructure Conference) ஒன்றினை 2024 மார்ச் 26 ஆம் திகதி கொழும்பில் ஒழுங்கமைத்துள்ளது. செயற்படுத்துதல் – வலுவூட்டுதல் – வளப்படுத்துதல் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்த மாநாடு, சேவைகள் வழங்கலுக்கான இயலுமை, உள்ளீர்ப்பினை வலுவாக்குவதன் ஊடாக சமூகங்களை வலுவூட்டல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வளமாக்கல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் நிலைமாற்றத்திற்கான ஆற்றல்களை பயன்படுத்துவது குறித்து ஆராய்கின்றது.

இந்த மாநாடானது அங்குரார்ப்பண அமர்வுடன் ஆரம்பமாகும் நிலையில், இந்த அமர்வில் ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு குழு நிலைக் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. முதலாவதாக நடைபெறும் “Accelerating Digital Sri Lanka’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பானது எவ்வாறு ஆட்சியினை இலகுவாக்குகின்றது என்பது தொடர்பாகவும், குறித்த சேவைகளை மக்கள் இலகுவாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படுகின்றது. அத்துடன் “Unlocking the Digital Stack” என்ற தலைப்பிலான இரண்டாவது குழு நிலை கலந்துரையாடலில் முதல் நிலை தளங்கள், இணைப்பு தொழில்நுட்பம், சந்தை மற்றும் ஆட்சி உள்ளிட்டவற்றில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

இந்த இரு அமர்வுகளும் முறையே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் ஆட்சி குறித்த நோக்கினையும், சிறந்த அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றை வழங்குவதற்காக பல்வேறு துறைகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய, இலங்கை நிபுணர்கள் இந்த இரு கலந்துரையாடல்களிலும் பங்கேற்கின்றனர். அத்துடன் இந்த மாநாட்டினை https://youtube.com/live/0mfxUibO3-g என்ற முகவரியில் மார்ச் 26 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் நேரலையாக பார்வையிடமுடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT