Thursday, May 16, 2024
Home » தவக்கால சிந்தனை பாராட்டுதலை எதிர்பாராத பிறர் பணி

தவக்கால சிந்தனை பாராட்டுதலை எதிர்பாராத பிறர் பணி

by sachintha
March 19, 2024 6:12 am 0 comment

தவக்காலத்தில் வருகின்ற புனித யோசேப்பின் பெருவிழாவானது நம்பிக்கை, தாழ்ச்சி, தந்தைக்குரிய பரிவு போன்ற விழுமியங்களால் பின்னிப்பிணைக்கப்பட்டு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

புனித யோசேப் ஏழ்மையான தச்சுத் தொழிலாளியாக, கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படிந்தவராக மனமாற்றத்திற்குரிய தவக்காலத்தில் நாம் எண்ணிப் பார்க்கக் கூடியவராகத் திகழ்கிறார்.

தவக்காலப் பின்னணியில் புனித யோசேப்பின் அமைதியான துணிவு, தளர்ச்சியுறாத நம்பிக்கை போன்றவை வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. கடவுளின் அறிவுறுத்தலுக்கு அவரது கீழ்ப்படிதலானது,அதிலும் குறிப்பாக திருக்குடும்பத்தினை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் அவர் காட்டிய அக்கறையானது நாமும் நமது வாழ்வின் நிச்சயமற்ற துன்பங்கள் நிறைந்த சூழ்நிலைகளில் கடவுளின் திட்டத்திற்கு நம்மையே வழங்க அழைப்பு விடுக்கிறது.

தவக்காலமானது விடுக்கின்ற அழைப்பு யாதெனில் நாமும் புனித யோசேப்பைப் போன்று கடவுளின் அருட்செல்வத்திற்கு நம்மையே முழுமையாகக் கையளிப்பதுடன் நமது பாதைகள் நிச்சயமற்றதாக இருந்தாலும் நம்பிக்கை நம்மை வழிநடத்தும் என்கிற உறுதியுடன் முன்செல்வோம் என்பதாகும்.

மேலும் பாதுகாவலராக, பராமரிப்பாளராக புனித யோசேப்பின் பணியானது அடுத்தவர்கள் மட்டிலான அதிலும், குறிப்பாக ஒதுக்கப்பட்டோர் தேவையில் இருப்பவர்கள் மட்டிலான பரிவினை எடுத்துரைக்கிறது.

தவக்காலமானது புனித யோசேப், மரியா, இயேசுவை பாதுகாத்தது போன்று நாமும் நமது வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய அடுத்தவரைப் பராமரித்தல் என்பதைக் குறித்து சிந்திக்க, தியானிக்க அழைக்கிறது.

இக் காலமதில், நாம் எவ்வாறு எமது குடும்பங்கள், சமூகங்கள், உலகம் என்கிற பரந்த குடும்பத்திற்கு நம்மாலான பராமரிப்பினை வழங்கலாம் எனச் சிந்திக்க வேண்டும்.

அவரது அமைதியான அர்ப்பணமானது தாழ்ச்சியின் முக்கியத்துவத்தை ஞாபகமூட்டுகிறது. அவரது தாழ்ச்சி கடவுளின் திட்டத்தினை மிகுந்த அன்போடு நிறைவேற்ற உதவியது. தவக்காலமானது நமது வாழ்வின் முக்கிய வாய்ந்தவைகள் எவை என்பதை அசைபோட்டுப் பார்க்க அழைப்புத் தருகிறது.. அங்கீகாரத்தையும் பாராட்டுதலையும் எதிர்பாராது அடுத்தவர்களுக்கு பணி புரிவோம்.

-அருட்தந்தை நவாஜி…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT