Monday, April 29, 2024
Home » பெரும்பாலான பகுதிகளில் இன்றும் வரட்சியான வானிலை

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் வரட்சியான வானிலை

- நாட்டின் சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

by Rizwan Segu Mohideen
March 19, 2024 7:51 am 0 comment

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT